ஆப்பிரிக்காவில் இரண்டு அபிவிருத்தி திட்டங்களை உருவாக்க இந்தியாவானது ஜப்பான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடன் இணையவுள்ளது.
இது ஆப்ரிக்கக் கண்டத்தில் வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் தனது தடத்தினை விரிவுபடுத்தவும் அப்பிராந்தியத்தில் வளர்ந்துவரும் சீனாவின் செல்வாக்கினை எதிர்கொள்ளவும் முற்படுகிறது.
இந்தத் திட்டத்தின்படி இந்தியாவானது
ஜப்பானுடன் இணைந்து கென்யாவில் புற்றுநோய் மருத்துவமனையை அமைக்கவுள்ளது.
UAE-உடன் இணைந்து எத்தியோப்பியாவில் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப மையத்தினை அமைக்கவுள்ளது.