2018-ஆம் ஆண்டின் ஆப்பிள் உலக அளவிலான மேம்பாட்டாளர்கள் கருத்தரங்கில் (Apple’s Worldwide Developers Conference-WWDC) “கால்ஜி 3” (Calzy 3) எனும் தன்னுடைய செயலிக்காக சென்னையைச் சேர்ந்த மென்பொருள் மேம்பாட்டாளர் நிறுவனம் வடிவமைப்பு விருதினை (design award) வென்றுள்ளது.
இந்தச் செயலியானது ராஜா விஜயராமன் என்பவரால் மேம்படுத்தப்பட்டதாகும். Calzy 3 என்பது பல பணிகளை செய்தல் (Multitasking), Face ID, Touch ID போன்ற அம்சங்களை வழங்குவதற்கு IOS தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தும் மிகவும் தனிப் பயனாக்கப்பட்ட கால்குலேட்டராகும் (highly customisable calculator).
ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு தளங்கள் மீது தொழிற்நுட்பம், புத்தாக்கம், வடிவமைப்புகளில் சிறந்த ஒன்றைப் பிரதிபலிக்கின்ற மேம்பாட்டாளர்களின் படைப்பாக்கக் கலைதிறன் மற்றும் தொழிற்நுட்ப சாதனைகளை அங்கீகரிப்பதற்காக வடிவமைப்பு விருது வழங்கப்படுகின்றது.