ஆப்பிள் இறக்குமதி விலையானது கிலோவிற்கு 50 ரூபாய்க்குக் குறைவாக இருந்தால், அவற்றை இறக்குமதி செய்ய அரசு தடை விதித்துள்ளது.
எனினும் பூடானிலிருந்து மேற்கொள்ளப்படும் ஆப்பிள் இறக்குமதிக்கு இந்த குறைந்த பட்ச இறக்குமதி விலை நிபந்தனை பொருந்தாது.
2022 ஆம் ஆண்டில் 385.1 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் ஆப்பிள் இறக்குமதி மதிப்பானது 2023 ஆம் ஆண்டில் 296 மில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.