TNPSC Thervupettagam

“ஆப்லோசாக்ஸின்“ இறக்குமதி

March 19 , 2018 2296 days 749 0
  • மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற வருவாய் துறையானது (Revenue Department)  சீனாவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் “ஆப்லோசாக்ஸின்“  (Ofloxacin) எனும் மருந்துப் பொருளின் மீது  பொருள் குவிப்பு தடுப்பு வரியை (Anti-dumping duty)  விதித்துள்ளது.
  • சில நோய் தொற்றுகளின் சிகிச்சையில் இந்த ஆப்லோசாக்ஸின் எனும்   மருந்துப் பொருள் பயன்படுத்தப்படுகிறது.
  • பொருள் குவிப்பு தடுப்பு மற்றும்  வரி விதிப்பு  பொது இயக்குநரின்  (Directorate General of Anti-Dumping and Allied Duties -DGAD) பரிந்துரையைத் தொடர்ந்து சீனாவிலிருந்தான       “ஆப்லோசாக்ஸின்”   இறக்குமதியின் மீது அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பொருள் குவிப்புத் தடுப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது.
  • ஆப்லோசாக்ஸினின் உண்மையான விலைமதிப்பைக் (normal value) காட்டிலும் மிகவும் குறைந்த விலையில் சீனா இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ததன் காரணமாக இந்தியாவில் பொருள் குவிப்பு நிலை (dumping) உண்டானது.
  • புளுவோராகுயினோலோனேஸ் (fluoroquinolones) எனும் ஆன்டிபயாடிக் குடும்பத்தில் ஆப்லோசாக்ஸின் உள்ளது. நோய் தொற்றுகளை உண்டாக்கக் கூடிய பாக்டீரியாக்களை கொன்று இது செயல்படக்கூடியது.
  • இறக்குமதி பொருட்கள் மீதான பொருள் குவிப்பு எதிர்ப்பு வரி விதிப்பு இந்தியாவில் மத்திய வர்த்ததக அமைச்சகத்தின் DGAD-ஆல் பரிந்துரைக்கப்படுகின்றது. மத்திய நிதி அமைச்சகம் இதனை அமல்படுத்துகின்றது.
  • நியாயமான வர்த்தக நடைமுறையை உறுதி செய்வதும், வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு இணையாக   உள்நாட்டுத்   தயாரிப்பாளர்களுக்கு   சந்தையில் உரிய போட்டிச் சூழலை உருவாக்கித் தருவதும் இந்த  பொருள் குவிப்பு  தடுப்பு வரி விதிப்பின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்