TNPSC Thervupettagam

ஆம்பூர் சமணர் குகை

October 16 , 2023 278 days 281 0
  • எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் குகை அமைந்துள்ள அர்மா மலையானது, மாநில அரசினால் விரைவில் வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட உள்ளது.
  • இது திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் நகருக்கு அருகில் அமைந்த மலையம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ளது.
  • தற்போது அதன் இயற்கையான உருவாக்கம் மற்றும் அதன் சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்கள் ஆகியவற்றிற்காக அந்தக் குகை மட்டுமே ஒரு வரலாற்றுச் சின்னமாக உள்ளது.
  • இந்தக் குகை ஓவியங்கள் ஆனது, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடைவரைக் குகையான சித்தன்னவாசலில் காணப்படும் ஓவியங்களை, குறிப்பாக அதன் வண்ணங்களைப் பயன்படுத்தும் பாணியை ஒத்திருக்கிறது.
  • தற்போது, தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையானது, மதுரையில் அதிகபட்சமாக 16 வரலாற்றுச் சின்னங்களுடன் மாநிலத்தில் மொத்தம் 93 வரலாற்றுச் சின்னங்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்