TNPSC Thervupettagam
May 25 , 2021 1190 days 603 0
  • மியூகோர்மைகோசிஸ் (அ) கருப்புப் பூஞ்சை நோய்க்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப் படும் ஆம்போடெரிசின்-பி எனும் மருந்திற்கு பல மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
  • ஆம்போடெரிசின்-பி என்பது ஒரு பூஞ்சை எதிர்ப்பு மருந்தாகும்.
  • இது தீவிரமான பூஞ்சைத் தொற்று நோய்க்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப் படுகிறது.
  • இது 1955 ஆம் ஆண்டில் ஸ்ட்ரெப்டோமைசிஸ் நோடோசலிருந்து (Streptomyces nodosus) பிரித்து உருவாக்கப்பட்டு 1958 ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வந்தது.
  • இந்த மருந்தானது பொதுவாக நரம்பின் மூலம் ஊசி வாயிலாக உட்செலுத்தப் படுகிறது.
  • இது தொற்றினை ஏற்படுத்தும் பூஞ்சையின் வளர்ச்சியைக் குறைக்கிறது.
  • இந்த மருந்தானது உலக சுகாதார அமைப்பின்சுகாதாரத் துறையில் அத்தியாவசிய, பாதுகாப்பான மற்றும் அதிசெயல்திறனுடைய மருந்துகள் பட்டியலில்சேர்க்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்