உலகளவில், 2019 ஆம் ஆண்டில் தொற்றா நோய்களால் (NCD) உயிரிழப்பவர்களின் விகிதம் 73.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
உயிரிழப்பில் தொற்று நோய்களின் பங்கு 18.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 13 மில்லியன் மக்கள் கோவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்ததாக மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.
2020 ஆம் ஆண்டில் உலகளவில் பதிவான உயிரிழப்பிற்குக் காரணமான கோவிட்-19 தொற்று உலகளவில் அதிகபட்ச பங்கினைக் கொண்டதாக தரவரிசையில் மூன்றாவது இடத்திலும், 2021 ஆம் ஆண்டில் இரண்டாவது இடத்திலும் இருந்தது.
லான்செட் ஆய்வின்படி, 1990 முதல் 2019 ஆம் ஆண்டு வரை உலகளாவிய ஆயுட்காலம் 7.8 ஆண்டுகள் அதிகரித்து 71.4 ஆண்டுகளாக இருந்தது.
கோவிட்-19 தொற்றுநோய் உலகளாவிய ஆயுட்காலத்தை 1.8 ஆண்டுகள் குறைத்தது.