TNPSC Thervupettagam

ஆயுட்காலத்தில் பதிவான வீழ்ச்சி

May 29 , 2024 179 days 187 0
  • உலகளவில், 2019 ஆம் ஆண்டில் தொற்றா நோய்களால் (NCD) உயிரிழப்பவர்களின் விகிதம் 73.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
  • உயிரிழப்பில் தொற்று நோய்களின் பங்கு 18.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 13 மில்லியன் மக்கள் கோவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்ததாக மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.
  • 2020 ஆம் ஆண்டில் உலகளவில் பதிவான உயிரிழப்பிற்குக் காரணமான கோவிட்-19 தொற்று உலகளவில் அதிகபட்ச பங்கினைக் கொண்டதாக தரவரிசையில் மூன்றாவது இடத்திலும், 2021 ஆம் ஆண்டில் இரண்டாவது இடத்திலும் இருந்தது.
  • லான்செட் ஆய்வின்படி, 1990 முதல் 2019 ஆம் ஆண்டு வரை உலகளாவிய ஆயுட்காலம் 7.8 ஆண்டுகள் அதிகரித்து 71.4 ஆண்டுகளாக இருந்தது.
  • கோவிட்-19 தொற்றுநோய் உலகளாவிய ஆயுட்காலத்தை 1.8 ஆண்டுகள் குறைத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்