ஆயுதக்குறைப்பின் முக்கியத்துவத்தினைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்தலையும், அணு ஆயுதங்கள் மற்றும் பிற பேரழிவு ஆயுதங்களை அகற்றச் செய்வதையும் ஊக்குவிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்தத் தினமானது கொண்டாடப் படுகிறது.
அணு ஆயுதங்கள் மற்றும் பிற பேரழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு கற்பிப்பதற்கும், அவற்றை அகற்றுவதற்காக செயல்படுவதற்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
ஆயுதக் குறைப்பு தொடர்பான ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 10வது சிறப்பு அமர்வின் போது, 1978 ஆம் ஆண்டு இந்தக் கண்காணிப்பு வாரமானது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் நிறுவப்பட்டது.