ஆயுதக் குறைப்பு தொடர்பான சிக்கல்கள் மற்றும் அவற்றின் பல்வேறு துறை சார்ந்த முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வையும் சிறந்த புரிதலையும் மேம்படுத்துவதற்கு இது முயல்கிறது.
இது ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டதன் ஆண்டு தினமான அக்டோபர் 24 ஆம் தேதியன்று தொடங்குகிறது.
இந்த ஆண்டு ஆனது ஒட்டாவா ஒப்பந்தம் அல்லது இராணுவ எதிர்ப்பு கண்ணிவெடித் தடை உடன்படிக்கையின் 25வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (NPT) ஆனது 1970 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
விரிவான அணு ஆயுத சோதனைத் தடை ஒப்பந்தம் (CTBT) ஆனது 1996 ஆம் ஆண்டில் உலக நாடுகளால் கையொப்பத்திற்கு முன் வைக்கப்பட்டது.
பொக்ரான் சோதனைக்குப் பிறகு 1974 ஆம் ஆண்டில் அணு ஆயுத விநியோகக் குழு (NSG) நிறுவப் பட்டது.
ஆஸ்திரேலியக் குழு (AG) ஆனது 1985 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
எறிகணைத் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பு (MTCR) ஆனது 1987 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.