TNPSC Thervupettagam

ஆயுதங்களின் சந்தை அறிக்கை

December 12 , 2020 1366 days 528 0
  • ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனமானது உலகம் முழுவதும் உள்ள ஆயுதங்களின் சந்தை குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • அமெரிக்க ஆயுதத் தொழிற்துறையானது கடந்த ஆண்டில் உலகின் “முதல் 25” உற்பத்தியாளர்கள் பட்டியலில் ஆயுத விற்பனையில் 61% அளவைப் பதிவு செய்திருந்தது. இதில் சீனாவின் அளவானது 15.7% ஆகும்.
  • உலக ஆயுதங்கள் விற்பனையில் சிறந்து விளங்கும் 2 மிகப்பெரிய நாடுகள் சீனா மற்றும் அமெரிக்கா ஆகியவையாகும்.
  • முதன்முறையாக, ”முதல் 25” என்ற பட்டியலில் மேற்கு ஆசியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனமானது இடம் பிடித்துள்ளது.
  • இது ஐக்கிய அரபு அமீரகத்தின் “EDGE” என்ற ஒரு நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்