TNPSC Thervupettagam

ஆயுதத் தளவாட தொழிற்சாலைகள் தினம் - மார்ச் 18

March 20 , 2020 1653 days 620 0
  • இது இந்திய அரசின் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு உற்பத்தித் துறையின் கீழ் செயல்படும் ஒரு தொழில்துறை அமைப்பாகும்.
  • ஆயுதத் தளவாட தொழிற்சாலைகள் வாரியமானது (OFB - Ordnance Factories Board) உலகில் அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் ஒரு மிகப்பெரிய உற்பத்தி நிறுவனம் ஆகும். மேலும் இது இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் மிகப் பழமையான அமைப்பாகும்.
  • இந்த வாரியங்கள் சிறிய ஆயுதங்கள், ஏவுகணைகள், ராக்கெட் ஏவுகணைகள், ரசாயனங்கள், வெடிபொருட்கள், சுரங்கங்கள், கையெறி குண்டுகள், பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் பணியை மேற்கொள்கின்றன.
  • இது பெரும்பாலும் "பாதுகாப்பின் நான்காவது தூண்" என்றும் இந்தியாவின் "ஆயுதப் படைகளுக்கு பின்னால் இயங்கும் படை" என்றும் அழைக்கப்படுகிறது.
  • OFB ஆனது உலகில் 37வது மிகப்பெரிய பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியாளராகவும் ஆசியாவில் 2வது மிகப்பெரிய பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியாளராகவும் இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியாளராகவும் விளங்குகின்றது.
  • டச்சு ஆஸ்டெண்ட் என்ற நிறுவனமானது மேற்கு வங்காளத்தில் இச்சாபூரில் துப்பாக்கி தூள் தொழிற்சாலையை நிறுவிய 1712 ஆம் ஆண்டு அன்று முதலாவது இந்திய ஆயுதத் தளவாட தொழிற்சாலையானது தொடங்கப் பட்டது.
  • 1801 ஆம் ஆண்டில், கல்கத்தாவின் காசிப்போரில் துப்பாக்கி வண்டி நிறுவனமானது நிறுவப் பட்டது.
  • இது தற்பொழுது வரை செயல்படும் இந்தியாவின் மிகப் பழமையான ஆயுதத் தளவாடத் தொழிற்சாலையாகும்.
  • தற்பொழுது நாட்டில் 41 ஆயுதத் தளவாடத் தொழிற்சாலைகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்