ஆயுதப் படையைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் தினம் - ஜனவரி 14
January 16 , 2020 1778 days 467 0
இத்தினமானது 2017 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகின்றது.
இந்திய ஆயுதப் படைகளின் முதலாவது தளபதியும் படைத் துறைப் பணியாளருமான கே.எம். கரியப்பா ஜனவரி 14 அன்று ஓய்வு பெற்றதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 ஆம் தேதியானது ஆயுதப் படை வீரர்களின் தினமாகக் குறிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இந்தத் தினமானது தற்காலிகப் போர் நிறுத்த தினம் என்று அழைக்கப் பட்டது.
நாட்டிற்கான சேவையில் இறந்த படை வீரர்களின் வீரத்தைப் பிரதிபலிக்கும் பொருட்டு இந்தத் தினமானது தனது பயணத்தை தற்காலிகப் போர் நிறுத்த தினம் என்று தொடங்கியது.
நினைவு தினம் போலல்லாமல், தற்காலிகப் போர் நிறுத்த தினத்தில், உலகமானது போரின் ஒரு பகுதியாக இருந்த வாழும் முன்னாள் படை வீரர்களுக்கு மரியாதை செலுத்துகின்றது.
இத்தினம் பற்றி
உலகெங்கிலும் நவம்பர் 11 ஆம் தேதியன்று தற்காலிகப் போர் நிறுத்த தினமானது கொண்டாடப் படுகின்றது.
இது முதலாம் உலகப் போரின் போது நட்பு நாடுகளுக்கும் ஜெர்மனிக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் குறிக்கும் வகையில் நவம்பர் 11 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
முதலாவது தற்காலிகப் போர் நிறுத்த தினமானது முதலாம் உலகப் போர் முடிவடைந்ததின் ஆண்டு நிறைவைக் குறிப்பதற்காகவும் முதலாம் உலகப் போரின் ஒரு பகுதியாக இருந்த துணிச்சலான வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காகவும் 1919 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டது.
இருப்பினும், 1926 ஆம் ஆண்டில் காங்கிரசால் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின் மூலம் இந்தத் தினமானது முதன்முதலில் இந்தியாவில் அனுசரிக்கப்பட்டது.