மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகமானது ஆயுஷ் மருந்துகளின் மருத்துவப் பரிசோதனைகளைத் தொடங்கி உள்ளது.
ஆயுஷ் மருந்துகளான அஸ்வகந்தா, குடுச்சி, யஷ்திமது மற்றும் ஆயுஷ் 64 போன்ற மருத்துவப் பரிசோதனைகள் தன்னார்வ சுகாதார ஊழியர்கள் மீது நடத்தப்பட உள்ளன.
இந்த முயற்சியை ஆயுஷ் அமைச்சகமானது, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றம் (CSIR - Council of Scientific and Industrial Research) மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் இணைந்து நடத்துகிறது.
ஏற்கனவே, ஆயுர்வேத மருந்தான ஜிங்கிவிர் மீது சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.