TNPSC Thervupettagam

ஆயுஷ்மான் உத்கிரிஷ்தா விருது 2022

October 7 , 2022 654 days 338 0
  • ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி - ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) திட்டத்தினைச் செயல்படுத்துவதில் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கு இந்த விருது வழங்கப் பட்டது.
  • சுகாதாரச் சேவைப் பதிவேட்டில் பல சுகாதார வசதிகளைச் சேர்த்ததற்காக உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு 2022 ஆம் ஆண்டிற்கான ஆயுஷ்மான் உத்கிரிஷ்தா விருதானது வழங்கப் பட்டுள்ளது.

மற்ற விருதுகள்

  • சிறப்பாகச் செயலாற்றும் மாநிலம்/ஒன்றியப் பிரதேசம்: ஆந்திரப் பிரதேசம்
  • சிறப்பாகச் செயலாற்றும் மாவட்டம்: ஆந்திரப் பிரதேசத்தின் பார்வதிபுரம் மான்யம்
  • சிறப்பாகச் செயலாற்றும் அரசு சுகாதார மையம்: கர்நாடகாவில் உள்ள தார்வாட் மாவட்ட மருத்துவமனை
  • சிறப்பாகச் செயலாற்றும் மாநிலங்கள்: கேரளா, மேகாலயா, குஜராத், மணிப்பூர், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம்
  • சிறப்பாகச் செயலாற்றும் ஒன்றியப் பிரதேசங்கள்: சண்டிகர் மற்றும் ஜம்மு & காஷ்மீர்
  • ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்குடன் இணைக்கப்பட்ட அதிக எண்ணிக்கையில் சுகாதார ஆவணங்களைக் கொண்ட சிறந்த அரசாங்க ஒருங்கிணைப்பாளர்: தேசியத் தகவல் மையம்
  • ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்குடன் இணைக்கப்பட்ட அதிக எண்ணிக்கையில் சுகாதார ஆவணங்களைக் கொண்ட சிறந்த தனியார் ஒருங்கிணைப்பாளர்: ஈகா கேர்
  • AB PMJAY திட்டமானது 018 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதியன்று தொடங்கப் பட்டது.
  • ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்கு (ABHA) என்பது தேசிய சுகாதார ஆணையத்தால் (NHA) தொடங்கப்பட்ட ஒரு தனிப்பட்ட சுகாதார அடையாளக் குறியீடு ஆகும்.
  • இது ஆதார் அட்டை அல்லது கைபேசி எண்ணைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட 14 இலக்க அடையாள எண்ணைப் பயன்படுத்துகிறது.
  • இது மருத்துவமனைகள், தனி மருத்துவமனைகள், காப்பீட்டு வழங்குநர்கள் மற்றும் பிற சம்பந்தப்பட்டப் பங்குதாரர்களுடன் பயனர்கள் தங்கள் உடல்நலம் சார்ந்தப் பதிவுகளை எண்ணிம முறையில் பகிர்ந்து கொள்ள வழிவகை செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்