ஆயுஷ்மான் பாரத் திவாஸ் ஆனது, ஆயுஷ்மான் பாரத் யோஜனாவின் கொள்கைகளை மேம்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது.
ஆயுஷ்மான் பாரத் யோஜ்னா 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உதவி வழங்கப்படுகிறது.
முறையான மருத்துவ வசதிகளைப் பெற முடியாத அனைத்து இந்தியர்களுக்கும் சுகாதார நலன்களை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது இந்திய மக்கள் தொகையில் 40% பேருக்கு மருத்துவமனைச் செலவுகள் உட்பட இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவ செலவுகளுக்கானக் காப்பீட்டுத் தொகையை வழங்கியுள்ளது.