TNPSC Thervupettagam

ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி – ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) செகாத் (SEHAT)

December 30 , 2020 1336 days 931 0
  • பிரதமர் மோடி அவர்கள் ஜம்மு காஷ்மீரில் வாழும் மக்களுக்காக ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி – ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY/Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana) செகாத் (SEHAT) என்ற திட்டத்தைத் தொடங்கவுள்ளார்.
  • SEHAT (Social, Endeavour for Health and Telemedicine) திட்டம் என்பது சுகாதாரம் மற்றும் தொலைதூர மருத்துவத்திற்கான சமூகம் மற்றும் முயற்சி என்பதைக் குறிக்கின்றது.
  • இந்தத் திட்டமானது அம்மாநிலத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சேர்க்கப் படாத ஒரு கோடி மக்களுக்குப் பயனளிக்க இருக்கிறது.
  • இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசமானது அனைவருக்குமான சுகாதார வசதியினை அளிக்க இருக்கும் முதல் ஒன்றியப் பிரதேசமாகும்.
  • இந்தத் திட்டமானது ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தில் வாழும் அனைத்து குடியிருப்பு வாசிகளுக்கும் 1 குடும்பத்திற்கு ரூ.5 இலட்சம் வரை இலவச சுகாதாரக் காப்பீட்டு வசதியை அளிக்கின்றது.
  • PMJAY ஆனது அரசினால் முழுவதும் நிதியளிக்கப் படும் வகையில் உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு/உறுதித் திட்டமாகும்.
  • இது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில் ரூ.5,00,000 அளவிற்கு ஒரு காப்பீட்டை வழங்குகின்றது.
  • அதாவது இதனைக் குடும்பத்தில் உள்ள ஒரு உறுப்பினராலோ அல்லது அனைத்து உறுப்பினர்களாலோப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
  • மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்