வழங்கப்பட்ட மொத்த ஆயுஷ்மான் அட்டைகளில் தோராயமாக 49% பேர் மற்றும் அங்கீகரிக்கப் பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப் படுபவர்களில் சுமார் 48% பேர் பெண்கள் ஆவர்.
ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி – ஜன் ஆரோக்கிய யோஜனாவின் (AB PM-JAY) கீழ் ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்படுகின்றன.
தற்போது அரசாங்க புள்ளி விபரங்களின்படி, 12 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 55 கோடி தனிநபர்கள் இத்திட்டத்தின் கீழ் இணைந்துள்ளனர்.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து தோராயமாக 28.45 கோடி ஆயுஷ்மான் அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதில், 2023 ஆம் ஆண்டில் தோராயமாக சுமார் 9.38 கோடி ஆயுஷ்மான் அட்டைகள் உருவாக்கப் பட்டுள்ளன.