ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) என்ற திட்டத்தினை அமல்படுத்தியுள்ள 34வது மாநிலமாக ஒடிசா மாறியுள்ளது.
இதுவரையில், ஒடிசாவும் இதர இரண்டு மாநிலங்களும் இந்தத் திட்டத்தினை இன்னும் செயல்படுத்தாமல் இருந்தன.
ஆயுஷ்மான் பாரத் திட்டமானது, ஒன்றோடொன்று தொடர்புடைய வகையில் இரண்டு திட்டங்களை உள்ளடக்கியதாகும்.
முதலாவது திட்டமானது, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம், இரண்டாவது பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா ஆகும்.
இந்தத் திட்டம் ஆனது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன் நோயறிதலுக்கான செலவுகளுக்கும், மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட பிறகு 15 நாட்கள் வரையிலான மருந்துச் செலவுகளுக்குமான சில ஆதரவுகளை உள்ளடக்கியது.
இந்தத் திட்டத்தின் கீழ், முக்கிய பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகள் உட்பட 27 வகையான சிறப்பு மருத்துவத் துறைகளில் தோராயமாக 2,000 சிகிச்சை முறைகள் சேர்க்கப் பட்டுள்ளன.