TNPSC Thervupettagam

ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வெள்ளை காண்டாமிருகம்

February 1 , 2024 297 days 558 0
  • ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட காண்டாமிருகக் கருவை மாற்றுத் தாய் முறையில் மற்றொரு காண்டாமிருகத்திற்கு மாற்றியதன் மூலம் முதல் முறையாக ஒரு காண்டாமிருகம் கர்ப்பம் தரித்திருப்பதாக அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர்.
  • 2009 ஆம் ஆண்டில், நான்கு வடக்கு வெள்ளை காண்டாமிருகங்கள் செக் குடியரசில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து கென்யாவில் உள்ள ஒரு வளங்காப்பு மையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
  • 2018 ஆம் ஆண்டில், கடைசியாக எஞ்சியிருந்த ஆண் காண்டாமிருகத்தின் மரணம் ஆனது வடக்கு வெள்ளை காண்டாமிருகத்தின் அழிவிற்கு வழிவகுத்தது.
  • செயற்கை முறை கருத்தரித்தல் அல்லது குருத்தணு தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், இந்த இனங்கள் அழிந்து நீண்ட காலத்திற்குப் பிறகு வடக்கு வெள்ளை காண்டாமிருகக் குட்டிகளை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையினை வழங்கியுள்ளன.
  • ஆப்பிரிக்காவில் சராசரியாக ஒவ்வொரு 16 மணி நேரத்திற்கும் ஒரு காண்டாமிருகம் வேட்டையாடப்படுகிறது.
  • தெற்கு வெள்ளை காண்டாமிருகங்கள் மிகப்பெரிய காண்டாமிருக இனமாக இருந்தாலும், ஆப்பிரிக்காவில் 7,000 ஆக உள்ள கருப்பு காண்டாமிருகங்களை விடக் குறைவாகவே உள்ளன.
  • ஆசியாவில் 4,000 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் மட்டுமே உள்ளன.
  • ஜாவா மற்றும் சுமத்ரா காண்டாமிருகங்கள் ஆகிய மற்ற இரண்டு காண்டாமிருக இனங்களின் எண்ணிக்கை தலா 100க்கும் குறைவாகவே உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்