மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI) ஆனது, ஆய்வகத்தில் மீன் இறைச்சியை வளர்த்து பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்துவதற்கான கூட்டு ஆராய்ச்சி ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளது.
இது ஆய்வகத்தில் வளர்க்கப்படுகின்ற - அல்லது உருவாக்கப்பட்ட / பண்படுத்தப்பட்ட இறைச்சியின் ஒரு வகை மட்டுமே ஆகும்.
கடல் சூழலில் வளராத கடல் சார் உணவு ஆனது, இறைச்சிகளுக்காக ஆய்வகத்தில் உருவாக்கப்படும் மற்ற இனங்கள் போலவே ‘வளர்க்கப்படுகின்றன’.
இதனால் ஒரு விலங்கினை வளர்த்து அதனை இறைச்சிக்காகக் கொல்ல வேண்டிய அவசியமற்றுப் போகிறது.
ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட செயற்கை மீன் இறைச்சியானது, மீன்களிலிருந்து குறிப்பிட்ட உயிரணுக்களைப் பிரித்தெடுத்து விலங்குகளின் உடற்கூறுகள் இல்லாத ஓர் ஊடகத்தைப் பயன்படுத்தி அவற்றை ஆய்வகக் கட்டமைப்பில் வளர்ப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.
முழு தயாரிப்பு ஆனது 'உண்மையான' மீன் இறைச்சியின் சுவை, உருவமைப்பு மற்றும் ஊட்டச்சத்து பண்புகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டச்சு நாட்டின் மருந்தியல் நிபுணர் மார்க் போஸ்ட் 2013 ஆம் ஆண்டில் வளர்ப்பு (செயற்கை) இறைச்சிக்கான கருத்தாக்கத்தை முதன்முதலில் முன்வைத்தார்.
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், அமெரிக்க வேளாண்மைத் துறையானது அந்த நாட்டில் வளர்ப்பு (செயற்கை) கோழி இறைச்சியின் விற்பனைக்கு அனுமதி வழங்கச் செய்தது.