TNPSC Thervupettagam

ஆரஞ்சு நிற வெளவால்

January 25 , 2023 675 days 379 0
  • சத்தீஸ்கரில் அச்சுறுத்தப்படுதல் நிலையில் உள்ள அரிய வகை ஆரஞ்சு நிற வௌவால் தென்பட்டுள்ளது.
  • 'வர்ணம் பூசப்பட்ட வெளவால்' என்றும் அழைக்கப்படுகின்ற இந்த விலங்கானது, பிரகாசமான ஆரஞ்சு மற்றும் கருப்பு நிற இறக்கைகளால் தனித்து வகைப்படுத்தப் படுகிறது.
  • இந்தப் பிரகாசமான ஆரஞ்சு நிற வௌவால் ஆனது, பாஸ்தார் மாவட்டத்தில் அமைந்து உள்ள கங்கர் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில், கடந்த சில ஆண்டுகளில் மூன்றாவது முறையாக தென்பட்டது.
  • இந்தத் தேசியப் பூங்காவானது, அதன் சுண்ணாம்புக் கற்களால் ஆன குகைகளுக்குப் புகழ் பெற்றதோடு, இது வெளவால்களுக்கு உகந்த வாழ்விடத்தையும் வழங்குகிறது.
  • 'கெரிவௌலா பிக்டா' என்ற அறிவியல் பெயரினைக் கொண்ட இந்த வர்ணம் பூசப் பட்ட வௌவால் இனமானது "அச்சுறுத்தப்பட்ட நிலையில் உள்ள" இனமாகும்.
  • வங்காளதேசம், மியான்மர், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, நேபாளம், இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இவை பொதுவாகக் காணப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்