இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் மத்தியக் கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-CTCRI) புதிய ஆரஞ்சு நிறச் சதை கொண்ட சர்க்கரை வள்ளிக் கிழங்கு வகையினை உருவாக்கியுள்ளது.
SP-95/4 என பெயரிடப்பட்ட உயிரிச் செறிவூட்டப்பட்ட ஆரஞ்சு நிறச் சதை கொண்ட சர்க்கரை வள்ளிக் கிழங்கு வகையானது, ஒடிசா, மேற்கு வங்காளம், கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் மிக வெற்றிகரமாக இறுதிச் சோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டுள்ளது.
இதில் சுமார் 100 கிராமிற்கு 8 மி.கி என்ற அளவில் பீட்டா கரோட்டின் இருப்பதால் இதில் இருக்கும் ஆரஞ்சு நிறத்திற்கு காரணமாகவும் வைட்டமின் Aக்கு ஒரு ஆதாரமாகவும் அது அமையும்.
ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கும் சமச்சீர் உணவை உறுதி செய்வதற்கும் பல்வேறு பழங்குடியினச் சமூகங்களிடையே உயிரிச் செறிவூட்டப்பட்ட கிழங்குகளை ஊக்குவிப்பதற்கான ஒரு பகுதியாக, 2023 ஆம் ஆண்டில் அட்டப்பாடியில் கிழங்குப் பயிர் அடிப்படையிலான 'வானவில் உணவு' என்ற ஒரு திட்டத்தினை CTCRI அறிமுகப் படுத்தியது.
2024 ஆம் ஆண்டில், இது 'புனர்ஜீவனம்' திட்டத்தின் கீழ் அதிகரிக்கப்பட்டது.