அலாஸ்காவில் சுத்தமான, தெளிவான நீல நிறத்தில் உள்ள ஆறுகள் மற்றும் நீரோடைகள் உருகும் நிலத்தடி உறைபனியினால் வெளியிடப்படும் நச்சு உலோகங்கள் காரணமாக துருப்பிடித்த ஆரஞ்சு நிறமாக மாறி வருகின்றன.
இரும்பு, துத்தநாகம், தாமிரம், நிக்கல் மற்றும் ஈயம் போன்ற உலோகங்களால் நிறமாற்றம் மற்றும் தெளிவின்மை ஏற்படுகிறது.
இதன் சில பகுதிகளில், வினிகரின் அமிலத் தன்மையைப் போலவே pH அளவு 2.3 ஆகக் குறைந்துள்ளது.
ஆர்க்டிக் பகுதிகள் ஒட்டு மொத்த உலகத்தை விட நான்கு மடங்கு வேகமாக வெப்பம் அடைகின்றன.
இதன் விளைவாக வட அமெரிக்காவில் உள்ள மிகவும் பழமையான ஆறுகளில் நீரின் தரம் மோசமடைந்து வருகிறது.