நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து 328 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் AYUSH மையங்களைக் கொண்ட மாநிலங்களில் மத்தியப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
பழங்குடியினர் பகுதியில், 228 ஆரம்ப மற்றும் சமுதாய சுகாதார நிலையங்களில் AYUSH மருத்துவர்கள் உள்ளனர் என்பதனால் இம்மாநிலம் தேசிய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இதில் 296 AYUSH மருத்துவர்களுடன் ஒடிசா மாநிலம் முதலிடத்திலும், 279 AYUSH மருத்துவர்களுடன் சத்தீஸ்கர் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
2005 ஆம் ஆண்டு முதல் கிராமப்புறங்களில் இருக்கும் துணை சுகாதார மையங்களின் எண்ணிக்கையைக் கணிசமாக அதிகரித்த இந்தியாவின் முதல் ஆறு மாநிலங்களில் மத்தியப் பிரதேசமும் ஒன்றாக உள்ளது.
உட்பிரிவு மற்றும் மாவட்ட மருத்துவமனைகளின் எண்ணிக்கையில் முதல் மூன்று இடங்களில் உள்ள மாநிலங்களில் மத்தியப் பிரதேசம் இடம் பெற்றுள்ளது.
அம்மாநிலத்தில் 144 உட்பிரிவு மருத்துவமனைகள் உள்ளன என்ற நிலையில் இதில் 281 எண்ணிக்கையுடன் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது மற்றும் 147 எண்ணிக்கையுடன் கர்நாடகா இரண்டாவது இடத்தில் உள்ளது.
மத்தியப் பிரதேசமானது 52 மாவட்ட மருத்துவமனைகளுடன் உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்தபடியாகவும் (125) மற்றும் டெல்லிக்கு முன்னதாகவும் (40) இரண்டாவது இடம் பெற்றுள்ளது.