TNPSC Thervupettagam
July 26 , 2017 2723 days 1141 0
  • சமீபத்தில் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், கிராமப்புற சாலைகளை பராமரிப்பதற்காக ஆரம்ப் (Aarambh) என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த செயலியானது புவியியல் தகவல் அமைப்பு (GIS) வரைபடத்தை சாலைபயன்பாட்டுத் திட்டங்கள், நிபந்தனை ஆய்வுகள் செலவுகளை மதிப்பிடுதல் மற்றும் சாலை தொடர்பான இதர விவரங்கள் மற்றும் வருடாந்திர சாலை பராமரிப்புத் திட்டங்கள் ஆகியவற்றிற்காக உபயோகப்படுத்த இலக்கு வைக்கிறது.
  • மேலும் "ஆரம்ப்" (Aarambh) என்ற பெயரில் மற்றொரு முயற்சியை இந்திய நிறுவனங்களின் பிணையம் மற்றும் பிரிட்டனில் உள்ள இணையக் கண்காணிப்பு நிறுவனம் (Internet Watch foundation) தொடங்கியது.
  • நாட்டிலேயே முதன்முறையாக இணையதளத்தின் மூலம் குழந்தைகளை பாலியல் மோசடி செய்வதைத் தடுக்க மற்றும் குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் இருந்து நீக்க இந்த செயலி உதவுகிறது.
  • ஆரம்பிந்தியா (Aarambh  India) அமைப்பில் ஹாட்லைனை (Hotline) தொடங்கப்பட்டு அதில் குழந்தைகளின் பாலியல் மோசடி பற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பற்றிப் புகாரளிக்க உதவுகிறது. இதைப் பயன்படுத்தி பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்