காடுகள் வளர்ப்பு மூலம் சுமார் 1,400-கி.மீ. நீளம் மற்றும் ஐந்து கி.மீ. அகலம் கொண்ட ஒரு பசுமையான மண்டலத்தினை உள்ளடக்கிய வகையிலான தனது பசுமை மண்டல உருவாக்கத் திட்டத்தினை இந்திய அரசு தொடங்கியுள்ளது.
இது ஆரவல்லி மலைத்தொடரைச் சுற்றியுள்ள ஓர் இடையக மையமாக இருக்கும்.
இது குஜராத், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லியின் சில பகுதிகளை உள் அடக்கியது ஆகும்.
இந்த உயர் இலட்சியமிக்கத் திட்டமானது புதர்த் தாவரங்கள் நிறைந்த நிலம், தரிசு நிலம் மற்றும் சேதமடைந்த வன நிலங்களில் பூர்வீக மரங்கள் மற்றும் புதர்ச் செடிகளை நடுவதை உள்ளடக்கியதாகும்.
இது தார் பாலைவனமானது கிழக்கு நோக்கி விரிவடைவதைத் தடுக்கும்.
நாட்டின் மேற்குப் பகுதியில் இருந்து டெல்லியின் தேசிய தலைநகர் பகுதி வரை வரும் தூசிக்கு இந்தப் பசுமை மண்டலம் ஒரு தடுப்பாக செயல்படும்.
முழு ஆரவல்லித் தொடரின் ஐந்து கி.மீ. இடையக மண்டலம் ஆனது 6.3 மில்லியன் ஹெக்டேர் (Mha) நிலப் பரப்பினை உள்ளடக்கியது.