TNPSC Thervupettagam

ஆராய்ச்சி மற்றும் விழிப்புணர்வுக்கான சர்வதேச சிறு தானிய முன்னெடுப்பு

February 27 , 2023 639 days 280 0
  • சிறு தானியங்களின் நுகர்வு மற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான ஓர் உலகளாவிய முன்னெடுப்பினைத் தொடங்குவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது.
  • உலகெங்கிலும் உள்ள சிறு தானிய ஆராய்ச்சி நிறுவனங்களை இணைப்பதோடு, சிறு தானியப் பயிர்கள் பற்றிய ஆராய்ச்சியையும் ஆதரிப்பதனையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியா “விதை நிதியம்” என்பதற்குப் பங்களிக்க உள்ள அதே சமயம் G20 அமைப்பின் ஒவ்வொரு உறுப்பினர் நாடுகளும் அதன் நிதிநிலையில் தனது உறுப்பினர் கட்டணமாக ஒரு தொகையினைப் பங்களிக்க வேண்டும்.
  • ஹைதராபாத்தில் அமைந்துள்ள இந்திய சிறு தானிய ஆராய்ச்சி நிறுவனம் ஆனது இந்த முன்னெடுப்பிற்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்கும்.
  • இந்தியாவின் வலியுறுத்தலின் மூலம், ஐக்கிய நாடுகள் சபையானது 2023 ஆம் ஆண்டினைச் சர்வதேச சிறு தானிய ஆண்டாக அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்