ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஆல்பைன் பனிச்சறுக்கு வீரர் ஆரிப் கான் 2022 ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
2022 ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் இடம் பெற்ற ஒரே இந்தியப் பனிச்சறுக்கு பந்தய வீரர் ஆரிப் கான் ஆவார்.
இது சீனாவில் நடைபெற உள்ள முதல் குளிர்கால ஒலிம்பிக் போட்டி என்பதோடு 2008 ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு அங்கு நடைபெற உள்ள ஒரு இரண்டாவது ஒலிம்பிக் போட்டி ஆகும்.
முன்பு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய அதே நகரத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.