ஜெர்மன் நாட்டில் இஸ்ரேலின் அரோவ்-3 எறிகணை இடைமறிப்பு அமைப்பின் முதல் நிறுவுதல் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படும்.
ஆரோ 3 அமைப்பு ஆனது, ஆரோ-2 மற்றும் ஆரோ-3 ஆகிய எறிகணை இடைமறிப்பு அமைப்புகளையும் உள்ளடக்கியது.
இது மிக நீண்ட தூர வரம்பிலான எறிகணை அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒரு கூட்டுறவின் மூலம் உருவாக்கப் பட்டது.
ஆரோ-3 அமைப்பை சுமார் 3.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் ஜெர்மனி நாட்டிற்கு விற்பதற்கு இஸ்ரேல் கடந்த ஆண்டு ஒப்புக் கொண்டது என்ற நிலையில் இது இன்று வரை பதிவாகாத அதன் மிகப்பெரிய பாதுகாப்பு துறை சார் விற்பனையாகும்.
எறிகணைகள் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைவதற்கு முன்பு அவற்றைத் தாக்கும் சிறப்புத் திறனை ஆரோ-3 கொண்டுள்ளது.