TNPSC Thervupettagam

ஆரோக்கிய சஞ்சீவனி காப்பீட்டுக் கொள்கை

April 5 , 2020 1699 days 628 0
  • இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது சுகாதாரக் காப்பீட்டு வழங்குநர்களுக்கு ஆரோக்கிய சஞ்சீவனி காப்பீட்டுக் கொள்கையைச் செயல்படுத்த சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
  • கோவிட்-19 நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதித்த பிறகு ஏற்படும் செலவுகளை ஈடு செய்யும் அடிப்படையில் இது தொடங்கப் பட்டு உள்ளது. 
  • இந்திய மக்கள்தொகையில் குறைந்தபட்சம் 55% பேருக்கு அடிப்படைக் காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்குவதற்கான ஒரு கொள்கையைக் காப்பீட்டு வழங்குநர்கள் கட்டமைக்க வேண்டும் என்று கட்டுப்பாட்டாளர் ஆணையம்  ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது.
  • காப்பீட்டிற்கான கட்டணத் தொகை ரூ.1000 முதல் ஒரு லட்சம் வரை இருக்கும்.
  • விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் ரூ.5 லட்சம் வரை காப்பீட்டு வசதியினைப்  பெற்றுக் கொள்ளலாம்.
  • இதனை 18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 65 வயதுக்கு உட்பட்ட குடிமக்களால் பயன்படுத்திக் கொள்ள இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்