கேரள பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆரோக்கிய பச்சா மரபணு அமைப்பின் (ட்ரைச்சோபஸ் சேலனிகஸ்) குறிமுறையை கண்டுபிடித்துள்ளனர்.
இது அகஸ்திய மலையில் இருக்கும் மிகவும் சக்தி வாய்ந்த மருத்துவத் தாவரமாகும்.
இந்த அதிசயத் தாவரமானது களைப்பை எதிர்த்துப் போராடுவதற்காக காணிப் பழங்குடியின சமூகத்தினால் பயன்படுத்தப் படுகின்றது. இது தனது பாரம்பரியப் பயன்பாட்டிற்காக அறியப்படுகின்றது.
இந்தத் தாவரமானது எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றி, பாலுணர்வுத் தூண்டி, அழற்சி எதிர்ப்பு, நோயெதிர்ப்பு, கட்டி எதிர்ப்பு, வயிற்றுப் புண் எதிர்ப்பு, குருதிக் கொழுப்பு மிகை எதிர்ப்பு, கல்லீரல் பாதுகாப்பு மற்றும் நீரிழிவு நோய் எதிர்ப்புப் பண்புக் கூறுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.