TNPSC Thervupettagam

ஆரோக்கிய மாந்தன் 2023

September 29 , 2023 296 days 211 0
  • தேசிய சுகாதார ஆணையம் (NHA) ஆனது, ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) அறிமுகப் படுத்தப்பட்டதன் மீதான ஐந்தாண்டு நிறைவினைக் கொண்டாடுவதற்காக ‘ஆரோக்ய மாந்தன்’ நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தது.
  • இது ஆயுஷ்மான் பாரத் எண்ணிமத் திட்டத்தின் (ABDM) இரண்டு ஆண்டுகளைக் குறிக்கும் விதமாகவும் கொண்டாடப்படுகிறது.
  • ஆயுஷ்மான் பாரத் PM-JAY திட்டமானது 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது.
  • ஆயுஷ்மான் பாரத் எண்ணிமத் திட்டமானது 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது.
  • இந்தத் திட்டமானது பல்வேறு சுகாதாரப் பாதுகாப்பு சூழல் அமைப்புகளின் பங்கு தாரர்களை இணைக்கும் எண்ணிமத் தளங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்