ஒரு நாளைக்கு 15 சிகரெட்டுகள் புகைப்பதற்குச் சமமான இறப்பு விளைவினை ஏற்படுத்தும் அளவிற்கு உள்ளதால், தனிமை நிலையானது ஒரு உலகளாவிய சுகாதார அச்சுறுத்தலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றின் படி, இளம் பருவத்தின் கடைநிலையில் உள்ளவர்களில், தனிமை நிலையானது மனச் சோர்வு ஏற்படுவதற்கான ஒரு பெரும் அபாயத்தினை 50 சதவீதமும், கரோனரி தமனி நோய் அல்லது பக்கவாத நோய் ஏற்படுவதற்கான ஒரு அபாயத்தினை 30 சதவீதமும் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டு உள்ளது.
மேலும், 5% முதல் 15% வரையிலான இளம் பருவத்தினர் பெரும் தனிமை நிலையில் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.