TNPSC Thervupettagam

ஆரோக்கியமான மறுபயன்பாட்டிற்கான நகர்ப்புற கழிவுநீர் நீரோடைகளின் உள்ளூர் சுத்திகரிப்பு (LOTUS-HR)

October 26 , 2019 1732 days 476 0
  • ஆரோக்கியமான மறுபயன்பாட்டிற்கான நகர்ப்புற கழிவுநீர் நீரோடைகளின் உள்ளூர் சுத்திகரிப்பு (Local Treatment of Urban Sewage Streams for Healthy Reuse - LOTUS-HR) எனப்படும் இந்தோ-டச்சு திட்டத்தின் இரண்டாம் கட்டமானது புது தில்லியில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரான ஹர்ஷ் வர்தன் மற்றும் டச்சு ராயல் தம்பதிகளான நெதர்லாந்து மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்சிமா ஆகியோரால் தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்தியக் குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்தின் அழைப்பின் பேரில் டச்சு ராயல் தம்பதிகள் ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.
  • இந்தப் பயணமானது அரசர் வில்லெம்-அலெக்சாண்டர் 2013 ஆம் ஆண்டில் அரியணை ஏறியதைத் தொடர்ந்து இந்தியாவிற்கு மேற்கொண்ட அவரது முதலாவது அரசுமுறைப் பயணமாகும்.
  • இது வடிகால்களில் இருந்து வரும் தூய்மையற்ற நீரைச் சுத்தப்படுத்த முயலும் ஒரு நீர் சுத்திகரிப்பு ஆய்வகமாகும்.
  • LOTUS-HR இல் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமானது ஈரநிலத் தொழில்நுட்பம் என்று அழைக்கப் படுகின்றது.
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயிரித் தொழில்நுட்பத் துறை மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்கான நெதர்லாந்து அமைப்பு ஆகியவை கூட்டாக இணைந்து இந்தத் திட்டத்தை ஆதரிக்கின்றன.
  • மேலும், தில்லியில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் எரிசக்தி & வள நிறுவனம் (The Energy and Resources Institute - TERI) ஆகியவை இந்தத் திட்டத்தின் பங்காளர் அமைப்புகளாக செயல்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்