TNPSC Thervupettagam

ஆர்.என்.ஏ திருத்தம் - வேவ் லைஃப் சயின்சஸ்

November 13 , 2024 9 days 73 0
  • உயிரித் தொழில்நுட்ப நிறுவனமான வேவ் லைஃப் சயின்சஸ், மருத்துவத் துறையில் ஆர்.என்.ஏ திருத்தம் மூலம் மரபணு சார்ந்த குறைபாட்டு நிலைக்குச் சிகிச்சையளித்த முதல் நிறுவனம் ஆகும்.
  • RNA குறுக்கீடு எனப்படும் செயல்பாட்டில் RNAவின் பங்கு CRISPR-Cas9 மரபணு-திருத்த நுட்பத்தின் வெற்றிக்கு இன்றியமையாததாக உள்ளது.
  • செல்கள் டிஎன்ஏவில் உள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி தூது ஆர்என்ஏவை (mRNA) ஒருங்கிணைக்கிறது என்ற நிலையில் பின்னர் mRNAவில் உள்ள சில வழிமுறைகளைப் பயன்படுத்திச் செயல்பாட்டுப் புரதங்களை உருவாக்குகிறது.
  • ஆர்.என்.ஏ திருத்தம் ஆனது, செல் ஒருங்கிணைப்பிற்குப் பிறகு, ஆனால் புரதங்களை உருவாக்குவதற்காகச் செல்கள் அதனை அணுகுவதற்கும் முன்னதாகவே mRNAவில் உள்ள பிழைகளை சரி செய்ய அறிவியலாளர்களுக்கு உதவுகிறது.
  • வேவ் லைஃப் சயின்சஸ் நிறுவனமானது ஆர்.என்.ஏ திருத்தம் மூலம் α-1 ஆன்டிட்ரிப்சின் குறைபாடு (AATD) என்ற ஒரு பரம்பரை மரபணு கோளாறுக்குச் சிகிச்சை அளித்தது.
  • டி.என்.ஏ திருத்தத்தினை விட ஆர்என்ஏ திருத்தம் ஆனது குறிப்பாக பாதுகாப்பு மற்றும் நெகிழ்வுத் தன்மையில் சில நன்மைகளைக் கொண்டுள்ளது.
  • டி.என்.ஏ திருத்தமானது ஒரு நபரின் மரபணுவில் நிரந்தர மாற்றங்களை ஏற்படுத்தச் செய்வதோடு, சில நேரங்களில் இது மீள முடியாத பிழைகளுக்கும் வழிவகுக்கும்.
  • ஆனால் ஆர்.என்.ஏ திருத்தம் என்பது சில தற்காலிக மாற்றங்களைச் செய்து, இந்தத் திருத்தங்களின் விளைவுகள் காலப்போக்கில் மறைய வழி வகுக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்