சமீபத்தில் தேசிய துருவ மற்றும் கடல் ஆராய்ச்சி மையமானது (NCPOR - National Centre of Polar and Ocean Research) கடந்த 41 ஆண்டுகளில் ஆர்க்டிக் கடற் பனியானது அதிகளவில் குறைந்துள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளது.
கடற் பனியானது பூமியின் மேற்பரப்பில் 7%த்தையும் உலகின் கடற்பகுதியில் 12%த்தையும் உள்ளடக்கியுள்ளது.
NCPOR ஆனது 1998 ஆம் ஆண்டில் மத்தியப் புவி அறிவியல் துறை அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையமாக, ஒரு தனிச் சுதந்திர அமைப்பாக நிறுவப் பட்டுள்ளது.
இது கோவாவில் அமைந்துள்ளது.
NCPOR என்பது துருவ மற்றும் தெற்கு கடற் பகுதியில் இந்தியாவின் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்தியாவின் ஒரு தலைமை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமாகும்.
ஆர்க்டிக் கடலானது வட அரைக்கோளத்தின் மத்தியில் ஆர்க்டிக் வட துருவப் பகுதியில் அமைந்துள்ளது.
ஆர்க்டிக் கடலானது உலகில் உள்ள 5 முக்கியமான கடல்களிடையே மிகச் சிறியதாகவும் ஆழம் குறைந்த கடலாகவும் உள்ளது. இது உலகில் உள்ள அனைத்துக் கடல்களிடையே “குளிர்ச்சி மிக்க கடலாகவும்” அறியப் படுகின்றது.