பனிக்கட்டி அளவினை "அதிகரித்தல்" மற்றும் ஆர்க்டிக் கடலை "மீண்டும் உறைய வைப்பதற்கு" உதவுகின்ற ஒரு புதுமையான வழியினை அறிவியலாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.
கடல் நீரைப் பனிக்கட்டியின் மீது பரவச் செய்வதற்கு பொறியாளர்கள் நீரேற்றிகளைப் பயன்படுத்த உள்ளனர், இதனால் இந்நீர் குளிர் காலத்தில் உறைந்து, பனி அடுக்கு தடிமனாகும் என எதிர்பார்க்கப்படும்.
இது கோடை காலத்தில் பனி நீண்ட காலம் நீடிப்பதை உறுதி செய்யும்.
இந்த நடைமுறை ஹைட்ரஜன் உதவியுடன் மிக வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறையாகும்.
ஒவ்வொரு தசாப்தத்திலும், ஆர்க்டிக் பெருங்கடலானது அதன் பனியில் சுமார் 13 சதவீதத்தை இழந்து வருகிறது.