TNPSC Thervupettagam

ஆர்க்டிக் காட்டுத் தீ

August 7 , 2019 1939 days 780 0
  • ஆர்க்டிக் பகுதிகளை அழித்துக் கொண்டிருக்கும் காட்டுத் தீயானது பனிக்கட்டி உருகுதல் மற்றும் நிரந்தரமாக உள்ள பனிப் படலம் உருகுதல் (பெர்மாப்ராஸ்ட்) ஆகியவற்றை அதிகப் படுத்தும் வகையில் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
  • இது ஆயிரம் ஆண்டுகளாக புதைத்து வைக்கப் பட்டிருந்த பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும்.
  • இந்தக் காட்டுத் தீயின் அளவானது கடந்த 16 ஆண்டு காலத்தில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் ஏற்பட்டிருக்கின்றது.
  • இந்தக் காட்டுத் தீ பீட் என்ற கரித் தீயை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
  • பீட் என்ற கரியானது அதிக அளவிலான கார்பனைச் சேமித்து வைக்கின்றது. பின்னர் இது எரிந்து அதிக அளவிலான கார்பன் டை ஆக்ஸைடை வளிமண்டலத்திற்குள் வெளியிடுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்