துருவப் பகுதியை சூழ்ந்து காணப்படும் காற்றோட்டம் ஆன துருவச் சுழல் ஆனது, 21 நாட்களுக்கு மர்மமான முறையில் திசை மாறியது.
இது கடந்த நாற்பது ஆண்டுகளில் பதிவான மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.
துருவச் சுழல் என்பது இது படை அடுக்கு மண்டலம் என்று அழைக்கப்படும் ஒரு பகுதியில் மேற்பரப்பில் இருந்து பல கிலோமீட்டர் உயரத்தில் ஒவ்வொரு குளிர் காலத்திலும் துருவப் பகுதியைச் சுற்றி வீசும் உயர்மட்டக் காற்றைக் குறிக்கின்ற பூமியின் வளிமண்டலத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்.
படையடுக்கு மண்டல துருவச் சுழல் ஆனது பூமியின் துருவப்பகுதி, சூரியனிடமிருந்து விலகி இருக்கும் போது புவியின் அரைக்கோளத்தில் குளிர்காலத்தில் தோன்றுகிறது.
இது நிகழும்போது, துருவ படையடுக்கு மண்டலமானது வெப்பமண்டல படையடுக்கு மண்டலத்துடன் ஒப்பிடுகையில் இருள் சூழ்ந்தக் கட்டத்தில் நுழைவதால் குளிர்ச்சி அடைகிறது.
இந்த வெப்பநிலை மாறுபாடு ஆனது படையடுக்கு மண்டலத்தில் வலுவான மேற்கு -கிழக்கு நோக்கிய காற்றோட்டம் உருவாக வழிவகுக்கிறது.
இந்த குளிர்காலப் படையடுக்கு மண்டலக் காற்று பொதுவாக ஆர்க்டிக் துருவச் சுழல் என்று குறிப்பிடப்படுகிறது.