கடந்த 15 ஆண்டுகளாக, ஆர்க்டிக் பகுதியின் பனிக்காலம் ஆனது வரலாற்று ரீதியாக இருந்ததை விட ஓரிரு வார காலங்கள் குறுகியதாக உள்ளது.
ஒட்டு மொத்தமாக, 1900 ஆம் ஆண்டில் இது குறித்த அளவீடுகள் தொடங்கியதிலிருந்து 2024 ஆம் ஆண்டானது ஆர்க்டிக் பகுதியில் இரண்டாவது அதிக வெப்பநிலை கொண்ட ஆண்டாக பதிவானது, மேலும் இதுவரை பதிவு செய்யப்பட்டதில் அதிகபட்ச ஈரப்பதம் கொண்ட கோடைகாலத்தினைக் கொண்டதாக இருந்தது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, பெரும் புதர்கள் மற்றும் நிலத்தடி உறைபனி அல்லது உறைந்த நிலப் பரப்பினைக் கொண்ட ஆர்க்டிக் துந்த்ரா நிலப்பரப்பு ஆனது, கார்பன் டை ஆக்சைடு ஈர்ப்பு/ உறிஞ்சு பகுதியாக செயல்படுகிறது.
கிரீன்லாந்து பனிப் படலத்தில் 27 ஆண்டுகாலத்தில் இல்லாத அளவிற்கான ஒரு பனி இழப்பு பதிவாகியுள்ளது.