TNPSC Thervupettagam

ஆர்க்டிக் பகுதியின் நிரந்தர உறைபனியில் நச்சுத்தன்மை மிக்க பாதரசம்

September 1 , 2024 42 days 71 0
  • ஆர்க்டிக் பகுதியில் உருகி வரும் நிரந்தர உறைபனி நச்சுத்தன்மை மிக்க பாதரசத்தை நீர் வளங்களில் வெளியிடுகிறது என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இது உணவுச் சங்கிலி மற்றும் அதை நம்பியிருக்கும் சமூகங்களுக்கு மிக கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
  • ஆராய்ச்சியாளர்கள் யூகோன் ஆற்றின் மேல் காணப்படும் மூன்று மீட்டர் அளவிலான நிரந்தர உறைபனியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்தனர்.
  • ஆற்றங்கரைகளின் மண்ணரிப்பு நிகழ்வின் போது "குறிப்பிடத்தக்க" அளவு பாதரசம் வெளியாகிறது என்று அவர்கள் கண்டறிந்தனர்.
  • பாதரசம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிரந்தர உறைபனியில் சிக்கியிருக்கக் கூடும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்