தோரந்தோ ஸ்கர்பாரோக் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வானது “உலக துருவக் கரடி நிலைபேறு அடைதலுக்கு விரைவான காலநிலை அளவு உலகியல் வரம்பை நிர்ணயிக்கின்றது” என்ற தலைப்பில் இயற்கைக்க்கான காலநிலை என்ற பத்திரிக்கையில் வெளியிடப் பட்டுள்ளது.
இந்த ஆய்வின்படி, காலநிலை மாற்றமானது துருவக் கரடிகளை முற்றிலுமாக அழிந்து போகும் நிலைக்குத் தள்ளி விடும் என்றும், ஆர்க்டிக் பகுதியில் உள்ள துருவக் கரடிகள் 2100 ஆம் ஆண்டில் அழிந்து போகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வானது துருவக் கரடிகளின் இனப்பெருக்கம் மற்றும் வாழும் திறன் ஆகியவற்றைப் பாதிக்கும் ஆர்க்டிக் கடலின் இழப்பு குறித்த காலக் கெடுவை அளிப்பதில் தன்னளவில் இதே வகையைச் சேர்ந்த முதலாவது ஆய்வாகும்.
துருவக் கரடிகள் அழிந்து வருவதில் கால நிலை மாற்றமானது முக்கியப் பங்கு வகிப்பதுடன் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தினால் ஒரு அழியக்கூடிய இனமாகப் இது பட்டியலிடப்பட்டுள்ளது.