TNPSC Thervupettagam

ஆர்க்டிக் பகுதியில் நிலவும் நெகிழி மாசு நெருக்கடி குறித்த அறிக்கை

April 24 , 2024 213 days 244 0
  • ஆர்க்டிக் பகுதியில் நிலவும் நெகிழி மாசு நெருக்கடி: பெட்ரோவேதியியல் தொழில் துறை மூலம் உடல்நலம், மனித உரிமைகள் மற்றும் உள்நாட்டு நிலங்களுக்கு விளையும் நச்சு மிகுந்த அச்சுறுத்தல்கள் என்ற தலைப்பில் அமைந்த இது ஒரு புதிய அறிக்கையாகும்..
  • இது நச்சுப் பொருட்கள் மீதான நடவடிக்கைக்கான அலாஸ்கா குழு (ACAT) மற்றும் சர்வதேச மாசு ஒழிப்பு வலையமைப்பு (IPEN) ஆகியவற்றால் வெளியிடப்பட்டது.
  • ஆர்க்டிக் என்பது உள்நாட்டு மற்றும் உலகளாவிய மூலங்களில் இருந்து இப்பகுதியில் குவியும் இரசாயனங்கள் மற்றும் நெகிழிகளுக்கான 'புவி அரைக்கோள மடு' ஆகும்.
  • இவை இப்பகுதியில் காணப்படும் 13 மில்லியன் உயிரினங்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
  • புதைபடிவ எரிபொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாடு ஆனது, ஆர்க்டிக் பகுதி எதிர் கொள்ளும் நெகிழி, இரசாயனங்கள் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனைகளுக்கான தொடக்கப் புள்ளியாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்