ஆர்க்டிக் பகுதியில் நிலவும் நெகிழி மாசு நெருக்கடி குறித்த அறிக்கை
April 24 , 2024 213 days 243 0
ஆர்க்டிக் பகுதியில் நிலவும் நெகிழி மாசு நெருக்கடி: பெட்ரோவேதியியல் தொழில் துறை மூலம் உடல்நலம், மனித உரிமைகள் மற்றும் உள்நாட்டு நிலங்களுக்கு விளையும் நச்சு மிகுந்த அச்சுறுத்தல்கள் என்ற தலைப்பில் அமைந்த இது ஒரு புதிய அறிக்கையாகும்..
இது நச்சுப் பொருட்கள் மீதான நடவடிக்கைக்கான அலாஸ்கா குழு (ACAT) மற்றும் சர்வதேச மாசு ஒழிப்பு வலையமைப்பு (IPEN) ஆகியவற்றால் வெளியிடப்பட்டது.
ஆர்க்டிக் என்பது உள்நாட்டு மற்றும் உலகளாவிய மூலங்களில் இருந்து இப்பகுதியில் குவியும் இரசாயனங்கள் மற்றும் நெகிழிகளுக்கான 'புவி அரைக்கோள மடு' ஆகும்.
இவை இப்பகுதியில் காணப்படும் 13 மில்லியன் உயிரினங்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
புதைபடிவ எரிபொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாடு ஆனது, ஆர்க்டிக் பகுதி எதிர் கொள்ளும் நெகிழி, இரசாயனங்கள் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனைகளுக்கான தொடக்கப் புள்ளியாக உள்ளது.