ஆர்க்டிக் பனிப்பாறைகள் வளிமண்டலத்தில் கணிசமான அளவு மீத்தேன் வாயுவினை வெளியிட்டு வருவதாக அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
உருகும் பனிப்பாறை நதியில் காணப்படும் மீத்தேன் செறிவு ஆனது வளிமண்டல சம நிலை அளவை விட 800 மடங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
இங்கு வெளியிடப்பட்ட மீத்தேன் ஆனது, பனிக்கு அடியில் உள்ள நுண்ணுயிர் செயல்பாட்டால் உற்பத்தி செய்யப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
மாறாக அது மில்லியன் கணக்கான ஆண்டுகளாக இந்தப் பிராந்தியத்தின் பண்டைய காலப் புவியியல் அமைப்புகளில் சிக்கியுள்ள மீத்தேன் போன்ற வெப்பமாக்க மூலங்களிலிருந்து உருவானது.
மீத்தேன் வாயுவானது கார்பன் டை ஆக்சைடுக்கு அடுத்தபடியாக, பருவநிலை மாற்றத்தினைத் தூண்டும் மிக முக்கிய இயக்கிகளில் ஒன்றாகும் என்பதோடு இது தொழில்துறைக்கு முந்தைய ஒரு காலத்திலிருந்துப் பதிவான சுமார் 30 சதவீத வெப்ப மயமாதலுக்கு காரணமாகும்.
வெப்பமயமாதலில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, மீத்தேன் வாயுவானது கார்பன் டை ஆக்சைடை விட 80 மடங்கு அதிக சக்தி வாய்ந்ததாக இருந்து வருகிறது.