TNPSC Thervupettagam

ஆர்க்டிக் மதிப்பீட்டு அறிக்கை 2023

December 23 , 2023 338 days 338 0
  • 2023 ஆம் ஆண்டு ஆனது ஆர்க்டிக் பகுதியில் பதிவான மிக வெப்பமான கோடைகால ஆண்டு என்ற முந்தையப் பதிவினை முறியடித்துள்ளது.
  • ஆர்க்டிக் பகுதியின் வெப்பநிலையானது, உலக சராசரி விகிதத்தை விட மூன்று மடங்கு வேகமாக உயர்ந்து வருகிறது.
  • கிரீன்லாந்தின் பனிப் படலமானது ஜூன் மாத இறுதியில் வேகமாக உருகத் தொடங்கிய நிலையில் இது இதுவரையில் பதிவான அதன் ஐந்தாவது உருகும் நிகழ்வு ஆகும்.
  • பேரண்ட்ஸ், காரா, லாப்டேவ் மற்றும் பியூஃபோர்ட் கடல்களில் கடல் மேற்பரப்பு வெப்ப நிலை ஆகஸ்ட் மாதத்தில் இயல்பை விட 9 முதல் 12 டிகிரி பாரன்ஹீட் (5 முதல் 7 டிகிரி செல்சியஸ்) அதிகமாக இருந்தது.
  • 2022-23 ஆம் ஆண்டு குளிர்காலத்தில் பனித் திரட்சியானது ஆர்க்டிக் முழுவதும் சராசரியை விட அதிகமாக இருந்தது.
  • அங்கு காற்று இயக்கங்களில் மாற்றங்கள் மற்றும் தீவிரமான கடல் புயல்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன.
  • யுகோன் நதி சினூக், 1970 ஆம் ஆண்டுகளில் இருந்து அளவில் சுமார் 6% வரை குறைந்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்