ஆர்க்டிக் வடத் துருவக் காடுகள் மண்டலம் – கார்பன் உமிழ்வு மூலம்
February 20 , 2025 3 days 47 0
மரங்களற்ற துந்த்ரா, வடத் துருவக் காடுகள் மற்றும் 26 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ள ஈரநிலங்களை உள்ளடக்கிய ஆர்க்டிக் வடத் துருவக் காடுகள் மண்டலம் ஆனது குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது.
இந்தப் பகுதியின் 40 சதவீதப் பரப்பானது அவை உறிஞ்சுவதை விட அதிக கார்பன் டை ஆக்சைடை வளிமண்டலத்தில் வெளியிடுவதால் கார்பன் உமிழ்விற்கான மூலமாக மாறியுள்ளது.
இது ஆயிரம் ஆண்டுகளாக ஒரு கார்பன் மடுவாக இருந்த அதன் இயல்பில் இருந்து அது மாறுவதைக் குறிக்கிறது.
இந்த மாற்றம் என்பது 1990 ஆம் ஆண்டிற்கு மிகவும் முன்பே தொடங்கியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அலாஸ்கா (44 சதவீதம்), வட ஐரோப்பா (25 சதவீதம்), கனடா (19 சதவீதம்), சைபீரியா (13 சதவீதம்) ஆகிய இடங்களில் கார்பன் உமிழ்வு மூலப் பகுதிகள் பரவியுள்ளன.
ஆர்க்டிக் வட துருவக் காடுகள் மண்டலம் ஆனது, பிராந்தியத்தின் 49 சதவிகிதம் ஆனது நீண்ட கால தாவர வளர்ச்சிப் பருவங்கள் மற்றும் அதிகரித்த தாவரப் பரவலுடன் குறிப்பிடத்தக்க "பசுமைத் தன்மையை" கண்டது.
இருப்பினும், இந்தப் பகுதியில் 12 சதவீதம் மட்டுமே ஆண்டுதோறும் நிகர கார்பன் மடு பகுதியாகச் செயல்படுகிறது.
ஒரு கார்பன் மடு பகுதியானது, அது வெளியிடுவதை விட, வளிமண்டலத்தில் இருந்து அதிக கார்பனை உறிஞ்சுகிறது.
ஒரு கார்பன் உமிழ்வு மூலமானது, அது உறிஞ்சுவதை விட அதிக அளவில் கார்பனை வெளியிடுகிறது.
நிலத்தடி உறைபனி என்பது தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக 0 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் கீழே உள்ள வெப்பநிலையில் பனியில் புதைந்துள்ளக் கார்பனை அதிக அளவு சேமித்துள்ள மண் அல்லது பாறை என வரையறுக்கப் படுகிறது.