TNPSC Thervupettagam

ஆர்க்டிக் வடத் துருவக் காடுகள் மண்டலம் – கார்பன் உமிழ்வு மூலம்

February 20 , 2025 2 days 43 0
  • மரங்களற்ற துந்த்ரா, வடத் துருவக் காடுகள் மற்றும் 26 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ள ஈரநிலங்களை உள்ளடக்கிய  ஆர்க்டிக் வடத் துருவக் காடுகள் மண்டலம் ஆனது குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது.
  • இந்தப் பகுதியின் 40 சதவீதப் பரப்பானது அவை உறிஞ்சுவதை விட அதிக கார்பன் டை ஆக்சைடை வளிமண்டலத்தில் வெளியிடுவதால் கார்பன் உமிழ்விற்கான மூலமாக மாறியுள்ளது.
  • இது ஆயிரம் ஆண்டுகளாக ஒரு கார்பன் மடுவாக இருந்த அதன் இயல்பில் இருந்து அது மாறுவதைக் குறிக்கிறது.
  • இந்த மாற்றம் என்பது 1990 ஆம் ஆண்டிற்கு மிகவும் முன்பே தொடங்கியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
  • அலாஸ்கா (44 சதவீதம்), வட ஐரோப்பா (25 சதவீதம்), கனடா (19 சதவீதம்), சைபீரியா (13 சதவீதம்) ஆகிய இடங்களில் கார்பன் உமிழ்வு மூலப் பகுதிகள் பரவியுள்ளன.
  • ஆர்க்டிக் வட துருவக் காடுகள் மண்டலம் ஆனது, பிராந்தியத்தின் 49 சதவிகிதம் ஆனது நீண்ட கால தாவர வளர்ச்சிப் பருவங்கள் மற்றும் அதிகரித்த தாவரப் பரவலுடன் குறிப்பிடத்தக்க "பசுமைத் தன்மையை" கண்டது.
  • இருப்பினும், இந்தப் பகுதியில் 12 சதவீதம் மட்டுமே ஆண்டுதோறும் நிகர கார்பன் மடு பகுதியாகச் செயல்படுகிறது.
  • ஒரு கார்பன் மடு பகுதியானது, அது வெளியிடுவதை விட, வளிமண்டலத்தில் இருந்து அதிக கார்பனை உறிஞ்சுகிறது.
  • ஒரு கார்பன் உமிழ்வு மூலமானது, அது உறிஞ்சுவதை விட அதிக அளவில் கார்பனை வெளியிடுகிறது.
  • நிலத்தடி உறைபனி என்பது தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக 0 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் கீழே உள்ள வெப்பநிலையில் பனியில் புதைந்துள்ளக் கார்பனை அதிக அளவு சேமித்துள்ள மண் அல்லது பாறை என வரையறுக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்