ஆர்டன் கேபிடல் நிறுவனத்தின் கடவுச் சீட்டுக் குறியீடு 2022
December 12 , 2022 712 days 374 0
இது உலகின் சக்தி வாய்ந்த மற்றும் சக்தி குறைந்த கடவுச் சீட்டுகளை தரவரிசைப் படுத்துகிறது.
கடவுச் சீட்டின் தரவரிசை மூன்று அடுக்கு அமைப்பு முறை மூலம் தீர்மானிக்கப் படுகிறது.
ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பின் 2018 ஆம் ஆண்டு மனித வளர்ச்சிக் குறியீடு ஆனது ஒரு சமன் முறிவு அளவாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகமானது, உலகின் அதிகாரம் மிக்க கடவுச் சீட்டினைக் கொண்டு உள்ளது.
இந்த கடவுச் சீட்டினை வைத்திருப்பவர்கள், நுழைவு இசைவுச் சீட்டு இல்லாமல் அல்லது “வருகை நிலையில் வழங்கப்படும் நுழைவு இசைவுச் சீட்டு” மூலம் 180 நாடுகளுக்குப் பயணம் செய்யலாம்.
ஜெர்மனி, ஸ்வீடன், பின்லாந்து, லக்சம்பர்க், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகியவை சிறந்த 10 செயல்திறன் கொண்ட நாடுகளில் உள்ளன.
உலகின் வலிமையான கடவுச் சீட்டுப் பட்டியலில் இந்தியா 87வது இடத்தில் உள்ளது.
சக்தி குறைந்த கடவுச் சீட்டுகளைக் கொண்ட நாடுகள் ஆப்கானிஸ்தான் (38 நாடுகள்) சிரியா (39), ஈராக் (40), பாகிஸ்தான் (44) ஆகியவையாகும்.